விண்வெளியில் செவ்வாய் மற்றும் வியாழனுக்கு இடையே சுற்றும் சிறுகோள்கள் சூரியனையும் சுற்றுவதால் அவ்வப்போது பூமிக்கு அருகில் வருகின்றன.
அதேபோல், 2029இல் ஒரு சிறுகோள் வரப்போகிறது. இதன் பெயர் அப்போஃபிஸ் (Apophis). இந்த சிறுகோள் 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பூமியில் மோதப்போவதில்லை.மேலும் மோதாமல் இருப்பதற்கான உத்தரவாதம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுகோள் 2029ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2036இல் பூமிக்கு அருகில் கடந்து செல்லும். அப்போது மோதும் அபாயம் இருப்பதாக முதலில் மதிப்பிடப்பட்டது. இந்த சிறுகோள் பூமியைத் தாக்கினால், ஒரு நாட்டின் நிலப்பரப்பு முழுதும் அழிக்கப்படலாம்.
அதேபோல் கடலில் மோதினால் சுனாமி வர வாய்ப்புள்ளது. பூமியில் எங்கு விழுந்தாலும் காற்று மாசு அதிகரித்து மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
350 மீட்டர் நீளம் கொண்ட இந்த சிறுகோள் ஒரு பெரிய கப்பல் போன்றது. இந்த சிறுகோள் பூமியைத் தாக்கினால், இதனை விண்வெளியில் வெடிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை நாசா உருவாக்கி வருகிறது.