இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் நடிகர்களான அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’அசுரன்’ திரைப்படத்தில் தனுஷின் மனைவியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். இந்த நிலையில்,'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கான திரைப்படமாக இருக்கும் என்றும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பது மற்றும் இயக்குநர் ஞானவேலுவுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினி, தனுஷ் மட்டுமின்றி ’விடுதலை 2’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாகவும் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.