இந்தப் படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள "தங்கலான்" திரைப்படம் ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்த காலத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்தும்,இசை வெளியீட்டு விழா குறித்தும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் "தங்கலான்" திரைப்படம் இம்மாதம் 15ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில்,இப் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமெனவும்,படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 5 ஆம் திகதி இடம்பெறுமெனவும் படக்குழு போஸ்டர்களைப் பகிர்ந்து அறிவித்துள்ளது.
இந்தப் போஸ்டர்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.