இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பினை மொஹமட் ஷிராஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் 213 வது ஒருநாள் வீரராக இன்றைய தினம் அறிமுகமாகியுள்ள மொஹமட் ஷிராஸ் இலங்கை ஏ அணியிலும் உள்ளூர் முதற்தர கிரிக்கட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
49 உள்ளூர் முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் மொத்தமாக 125 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதுடன் இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதற்தரப் போட்டி ஒன்றில் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் கண்டி - மடவளை அல் / மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.