இப்படி இருக்க விரும்புபவர்கள் கட்டாயம் உங்கள் உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அந்தவகையில், ஒவ்வொரு நாளும் உடல் இயக்க செயற்பாடுகளுக்கு குறைந்தபட்சம் 10 நிமிடங்களை ஒதுக்கினாலேயே போதுமானது. எந்த வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்? அது கடினமானதாக இருக்குமா? எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும்? என்றெல்லாம் சிந்திக்கத் தேவையில்லை.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது விருப்பமான உடற்பயிற்சியைச் செய்யலாம். அதற்கும் முடியாத பட்சத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் குறைந்தபட்சம் 10 நிமிடங்களையாவது உடல் இயக்க செயற்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.
எந்த சமயத்தில் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, அதில் புரதமும்,காய்கறிகளும் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தினமும் மாலையில் 10 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் மேற்கொள்வதும் அவசியம். இதற்காக அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. தியானம் செய்ய இயலாதவர்கள் இந்தப் பயிற்சியை கையாளலாம். உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது அமர்ந்தபடியே கண்களை மூடிக்கொண்டு மெதுவாக மூச்சை உள் இழுத்துவிட்டு ஆழமாக சுவாசித்தால் போதும். இதனைச் செய்து வருவது மனதை தெளிவுபடுத்துவதோடு மனதை அமைதியாகவும் வைத்திருக்க உதவும்.
அத்தோடு வாழ்வின் எல்லா நாட்களும் எல்லோருக்கும் இனிமையாக நகராது. ஏதாவதொரு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அத்தகைய நேரங்களில் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து விரைவில் மீண்டுவிடுங்கள்.
தொடர்ந்து பணிச்சுமையுடன் இருப்பவர்கள்,சில நாட்கள் விடுமுறை எடுத்து விரும்பிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள். அந்தப் பயணம் கவலைகளை மாற்றி உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும்.
இவற்றைப் பின்பற்றினாலே போதும். உங்கள் அன்றாட வாழ்வு சிறப்பாக இருக்கும்.