யாசகம் பெற்று தனது வாழ்க்கையினைக் கொண்டு சென்ற ஒரு இளம் பெண்ணொருவருக்கு சுயமாக சம்பாதிக்க உதவிய ஒரு உயர்வான மனிதரைப் பற்றிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வறுமையின் காரணமாக பெரும்பாலானவர்கள் தாங்கள் விரும்பாத செயல்களில் வலுக்கட்டாயமாக ஈடுபடுகின்றனர். எமது நாட்டிலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் பல இடங்களில் காணப்படுகின்றனர். இவர்களில் சிலர் பிழைப்புக்காக யாசகம் கேட்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தனது குழந்தையை கையில் ஏந்தியபடி வீதியோரத்தில் யாசகம் கேட்ட இந்தப் பெண்ணிற்கு சிலர் தங்கள் உதவியினை வழங்கிய நிலையில் அங்கு வந்திருந்த ஒருவர் பொம்மைகளை வாங்கி சிறிய கடை ஒன்றினை வைத்துக்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக யாசகம் பெறுவதை நிறுத்திய இந்தப்பெண், பொம்மைகளை விற்கத்தொடங்கி அவருக்கு நன்றியும் கூறியுள்ளார்.
குறித்த இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.