இருப்பினும் பிரேசிலைச் சேர்ந்த 102 வயதான முதியவர் ஒருவர் , ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாக 84 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார்.
பிரேசிலில் இயங்கி வரும் ஆடைத் தயாரிப்பு நிறுவனமொன்றில் கடந்த 1938 ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த இவர், அதே நிறுவனத்தில் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று தொடர்ச்சியாக 84 வருடங்கள் பணிபுரிந்திருந்தார்.
இவருடன் பணியாற்றி வந்த பலரும் ஒரு சில ஆண்டுகளில் வேறு பல நிறுவனங்களுக்குச் சென்றிருந்தாலும் இவர் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததுடன், கடந்த 2022ஆம் ஆண்டு தனது 100ஆவது வயதில் பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அப்போது, அவர் 84 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதற்காக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் பொறிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர் தனது 102வது வயதில் கடந்த 2ஆம் திகதி மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவர் பணியாற்றிய நிறுவனத்தினர் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தினை வழங்கும் வகையில் சில செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.