SooriyanFM Gossip - சருமத்தை மென்மையாக்கும் கடலை மா Face PackSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
422 Views
நமது சருமம் வறட்சியாக இருக்கும்போது சருமத்தில் ஈரப்பதத்தை மீட்டெடுக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம். கடலை மா மற்றும் Rose Water கலந்த கலவை சருமத்தில் காணப்படும் வறட்சியை நீக்க உதவுகின்றது.
ஒரு தேக்கரண்டி கடலை மாவுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டி Rose Water ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று கலந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பேஸ்ட்டை சருமம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
சிலருக்கு முகத்தில் உள்ள துளைகள் திறந்தே இருக்கும். இதைச் சரிசெய்ய ஒரு தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம், மஞ்சள் தூள், பசுப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை சருமம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள துளைகள் விரைவில் மூடிவிடும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றி வந்தால், எமது சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.