மொபைல் யூஸர்களிடையே ஃபைல்களைப் பகிர பயன்படுத்தக் கூடிய Quick Share என்ற ஃபைல்களை Share செய்யும் புதிய அம்சத்தை WhatsApp அண்மையில் சோதனை செய்துள்ளது. தற்போது இந்தக் கருவியை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளது WhatsApp நிறுவனம்.
இனி Internet இல்லாமலேயே Android மற்றும் iOSற்கு இடையே வயர்லெஸ் முறையில் ஃபைல்களைப் பகிர இந்த வசதி உங்களை அனுமதிக்கிறது. இந்த வசதி தற்போது வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது.
இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதனை செயற்படுத்திக்கொள்வதற்கு உங்களுக்கு இணைய வசதி தேவையில்லை, உங்களது Phoneஇல் உள்ள Bluetooth மற்றும் பிற சாதனங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் செயற்படுத்திக்கொள்ள முடியும்.
Wi-Fi Direct என்ற அம்சத்தைப் பயன்படுத்தி அனைத்து மீடியா உள்ளடக்கம், ஆவணங்கள் மற்றும் பிற கோப்புகளைப் பகிர இந்த அம்சம் உங்களை அனுமதிக்கும். இந்த வசதியின் மூலம் Android மற்றும் iOS பயனர்களுக்கு இடையிலும் ஃபைல்களை பகிரக்கூடியதாக இருக்கும்.