2025 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் தோனி விளையாடுவாரா? என்ற சந்தேகம் கிரிக்கெட் இரசிகர்கள், வீரர்கள் மத்தியிலும் நிலவுகிறது.
இந்தநிலையில், அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட தோனியிடம் இதுதொடர்பாக இரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த தோனி, " 2025 IPL தொடரில் எத்தனை வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்பதைப் பொறுத்தே நான் விளையாடுவேன். “தக்க வைக்கப்படும் வீரர்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்படவுள்ளன. அந்த விதிமுறைகளைப் பொறுத்துதான் முடிவுகள் எடுக்கப்படும்.
குறித்த முடிவுகளை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம். ஏனெனில் நாளின் இறுதியில் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். அதனால் விதிமுறைகள், தக்க வைப்புகளின் அடிப்படையில் CSK அணிக்கு எது சிறந்தது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு நல்ல முடிவை எடுப்போம்” என தோனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.