தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் அவரது 68ஆவது படமான G.O.A.T படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, கேரளா, ரஷ்யா என பல இடங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்க படத்தின் 3ஆவது பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அப்பாடலை விஜய் இரசிகர்கள் கொண்டாடியும் வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய் G.O.A.T திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் சொன்ன முதல் விமர்சனம் "அருமையாக இருக்கிறது, அவசரப்பட்டு ஓய்வை அறிவித்து விட்டேன், இன்னொரு படம் உன்னோடு பண்ணியிருக்கலாம்" என்று கூறியுள்ளாராம்.
விஜயின் முதல் விமர்சனம் கேட்டு படக்குழுவினர் அனைவருமே மிகவும் சந்தோஷமாக உள்ளார்களாம். இந்தத் தகவல் G.O.A.T திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக தமிழ் சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றது.