சிறுநீரகக் கற்கள் விரைவில் கரைவதற்கு வாழைத்தண்டு உதவுகின்றது.
வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும்.
நெஞ்செரிச்சல் அதிகமாக இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டை ஜூஸாக தயார் செய்து குடிக்கலாம்.
நீரிழிவு நோயாளர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது.
வாழைத்தண்டை உட்கொள்வதனால் இதயம் பலமாகக் காணப்படுவதுடன் உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பும் கரையும்.
எனவே வாழைத்தண்டை உட்கொண்டு எமது உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்வோம்.