டெஸ்லா , ஸ்பேஸ் X , X தளம் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரும் செல்வந்தருமான Elon Musk செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது மீண்டும் AI குறித்து எச்சரித்துள்ளார். சிறிய விடயங்களில் கூட AI பொய் சொல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மஸ்க் தனது நேர்காணலில், "AI தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி கவலையடைச் செய்கிறது. சிறிய விடயங்களாக இருப்பவை நாளடைவில் பாரியதாக மாறும். மேலும் மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்த ஆரம்பிக்கும் போது இன்னும் அதிகளவு பொய் கூறும்.
கடந்த கால வரலாறுகளில் பிறப்பு வீதம் குறைவதே நாகரீக வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. AI இல் இருந்து மனித இனம் மீண்டுவரவில்லை எனில், இதே நிலை மீண்டும் எழுவதை யாரும் தடுக்க முடியாது'' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்து வரும் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கையும் தனக்கு கவலையை ஏற்படுத்துகிறது என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.