உடல் ஆரோக்கியத்தைப் பலமாக வைத்துக்கொள்ள உதவும் ஏராளமான பழ வகைகளில் கறுப்பு உலர் திராட்சையும் ஒன்றாகும். இந்த கறுப்பு உலர் திராட்சைப் பழத்தின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
கறுப்பு உலர் திராட்சைப் பழத்தில் பொட்டாசியம், கல்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை எலும்புகளுக்கு பலம் சேர்கின்றன.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த கறுப்பு உலர் திராட்சைப் பழத்தை உட்கொள்ள வேண்டும். கறுப்பு உலர் திராட்சைப் பழத்தில் காணப்படும் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.
உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க கறுப்பு உலர் திராட்சைப் பழங்களை வாரம் இருமுறை உண்ணலாம்.
செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குறைக்க கறுப்பு உலர் திராட்சைப் பழம் உதவுகின்றது.
எனவே கறுப்பு உலர் திராட்சைப் பழங்களை உட்கொண்டு எமது உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்வோம்.