இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த சிறுத்தையொன்றை மூன்று நாய்கள் துரத்தியடித்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
மனிதர்களுக்கு நண்பனாகவும் காவலனாகவும் நெருங்கிப் பழகும் விலங்குகளில் நாய்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன.
நள்ளிரவு வேளை குறித்த வீட்டினுள் நுழைந்த சிறுத்தையினை நாய்கள் துரத்தியதனை அடுத்து அந்த வீட்டில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேகமாக அந்த இடத்தில் இருந்து சிறுத்தை தப்பி ஓடிய காட்சிகள் வீட்டின் CCTV இல் பதிவாகி அந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
இது தொடர்பில் செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த வீட்டின் உரிமையாளர் , கடந்த சில வாரங்களாக தனது வீட்டினை அண்டியுள்ள பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடளித்தும் இதுவரையில் எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.