ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், தனது ட்விட்டை அதிகம் விரும்பி கருத்துத் தெரிவிப்போருக்கு பத்து இலட்சம் ரூபாய் பரிசளிக்கவுள்ளதாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரிஷப் பண்ட்டின் எக்ஸ் தள பதிவில், "ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால், எனது ட்விட்டை அதிகம் விரும்பி கருத்து தெரிவிப்போருக்கு 10 இலட்சம் தருகிறேன். அதேபோல் கவனத்தைப் பெற முயற்சி செய்யும் முதல் 10 நபர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
எனது சகோதரர் நீரஜ் சோப்ராவிற்கு இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன். இறுதிப் போட்டியில் நீரஜ் நிச்சயம் வெல்வார். அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தங்கம் வென்றாலும், வெல்லவில்லை என்றாலும் அவரை நாம் கொண்டாட வேண்டும் என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.