சருமத்தைப் பளபளப்பாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உண்டு. பொடுகுத்தொல்லை, உடல் உஷ்ணம் போன்ற காரணங்களால் முகப்பரு வரலாம். சில பருக்கள் வலியை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி சரும அழகைப் பாதிக்கின்றது. எனவே சருமத்தில் தோன்றும் பருக்களை எவ்வாறு நீக்கலாம் என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
சருமத்தை தினமும் மூன்று முறையாவது தண்ணீரில் சுத்தமாகக் கழுவினால் பருக்களைக் குறைக்கலாம்.
சருமத்தை கரடுமுரடான துணியால் அழுத்தித் துடைப்பதால் சரும எரிச்சல், தோல் சிவத்தல், சரும வீக்கம் என்பன ஏற்படலாம். அத்துடன்
இவ்வாறு செய்வதால், முகத்தில் இருக்கும் பருக்கள் வெடித்து ஏனைய பகுதிகளுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
தலைமுடிக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய், ஜெல் போன்றவை சருமத்தில் கலக்கும் போது பருக்கள் அதிகரிக்கின்றன. எனவே, உங்கள் தலைமுடியை முடிந்தவரை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் பொடுகு, பேன் தொல்லையாலும் முகப்பரு உண்டாகலாம்.
சருமத்தில் உள்ள பருக்களை கைகளால் உடைத்து காயப்படுத்துவதும் பருக்களின் பரவலுக்குக் காரணமாகும். பருக்களை உடைக்கும் போது சருமத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பருக்கள் பரவுகின்றன.
எனவே மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி சருமத்தைப் பாதுகாத்திடுங்கள்.