இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கோவில் பண்டிகைகள் நடைபெறுவதால், மக்கள் தங்களது விருப்பங்களை சிவபெருமானுக்கு விரதம் மற்றும் வழிபாடுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மாதத்தில் வடமாநிலங்களில் உள்ள பக்தர்கள் நீண்ட தூரம் பாத யாத்திரை செல்வதும், வழிபாடு நடத்துவதும் வழக்கமான ஒரு விடயமாக இருக்கும் நிலையில், திருமணமாகாத இளைஞர் ஒருவர் சிவபெருமானுக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில், “பலமுறை முயற்சித்தும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை என்றும் கடைசி நம்பிக்கையாக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள குறித்த இளைஞர், இனி காதல் திருமணமாக இருந்தாலும், நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் தனக்கு சம்மதம் என்றும் , இதற்காக ஒரு கிலோ கஞ்சாவை காணிக்கையாகத் தருவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
குறித்த கடிதத்தில் காணப்பட்ட பெறுநர் முகவரியில் சிவபெருமானின் கைலாய மலை என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அவதானித்த தபால் நிலைய ஊழியர் அந்த கடிதத்தினை எடுத்துப் பிரித்துப் பார்த்த நிலையிலேயே இந்தக் கடிதம் வைரலாகியுள்ளது.