வானளாவிய கட்டிடத்தின் அளவுள்ள ஒரு சிறுகோள் பூமியை நோக்கி நகர்கிறது. இந்த மாதத்தில் 5 சிறுகோள்கள் பூமியைக் கடந்து செல்லவுள்ளன.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் படி, 5 சூப்பர்ஜெயண்ட் சிறுகோள்கள் பூமியை நெருங்கி வருகின்றன.
பல்வேறு அளவுகளில் உள்ள இந்த சிறுகோள்கள் இம்மாதம் 8 மற்றும் 13ஆம் திகதிகளுக்கு
இடையில் பூமியைக் கடந்து செல்ல உள்ளன. இந்த சிறுகோள்களில் மிகப்பெரியது - 2024 KH3 என்ற சிறுகோள் ஆகும். இது 610 அடியாகும். அதாவது சுமார் ஒரு உயர்ந்த கட்டிடத்தின் அளவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
2024 KH3 சிறுகோள் இம்மாதம் 10ஆம் திகதி பூமியைக் கடக்க வாய்ப்புள்ளது. பூமியில் இருந்து குறைந்தபட்சம் 5.6 மில்லியன் கி.மீ தூரத்தை இந்தப் பெரிய சிறுகோள் கடந்து செல்ல உள்ளது.
இதேபோல், 2024 ON2 என பெயரிடப்பட்ட சுமார் 120 அடி விட்டம் கொண்ட ஒரு விமானம் அளவிலான சிறுகோள், ஓகஸ்ட் 12ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 6.8 மில்லியன் கி.மீ தொலைவில் கடக்கும்.
2024 PK1 என பெயரிடப்பட்ட சுமார் 110 அடி விட்டம் கொண்ட மற்றொரு சிறுகோள், ஓகஸ்ட் 10ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 PN1 என்ற சிறுகோள் சுமார் 86 அடி விட்டம் கொண்டது. இது ஓகஸ்ட் 8ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 PS1 என பெயரிடப்பட்ட சுமார் 58 அடி விட்டம் கொண்ட சிறுகோள், ஓகஸ்ட் 13ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் வரும். இது சுமார் 1.3 மில்லியன் கி.மீ தொலைவில் கடந்து செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.