தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணமகன், குறித்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்துள்ளதுடன், திருமணமாகி 4 மணித்தியாலங்கள் இருவரும் தனிமையில் இருந்த போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கைகலப்பாக மாறியதுடன், சில நிமிடங்களில் இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக்கொண்டுள்ளனர்.
இதையடுத்து, பலத்த காயங்களுக்குள்ளாகி மயக்கமான நிலையில் இருந்த இருவரையும் உறவினர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இருப்பினும் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வழியில் குறித்த மணமகள் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மணமகன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்தப்பகுதி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.