புளிச்சக்கீரையை உட்கொள்வதால் இரத்த ஓட்டம் சீராகக் காணப்படும்.
புளிச்சக் கீரையின் சாறு, சிறிதளவு மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சாப்பிட்டால் இருமல்,சளி மற்றும் சுவாசக் கோளாறுகளில் இருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.
சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகலாம்.
புளிச்சக்கீரை அதிக உடல் வெப்பத்தைத் தணிக்க உதவுகின்றது.
எனவே இந்த புளிச்சக் கீரையை வாரத்திற்கு ஒரு முறையாவது
உட்கொண்டு பயன் பெறுங்கள்.