உடலில் ஏற்படும் அஜீரணக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய இஞ்சி பெரிதும் உதவுகின்றது. அத்துடன் வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்சினைகளின் போது இஞ்சியை தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டி அருந்தலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கையும், வலியையும் கட்டுப்படுத்த இஞ்சி உதவுகின்றது.
நீரிழிவு நோயாளர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்கு இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக உடல் எடையைக் கொண்டவர்கள் இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு வடிகட்டிய பின்னர் அருந்தலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவர உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடல் எடையும் சீராகக் காணப்படும்.
எனவே இஞ்சியைப் பயன்படுத்தி எமது உடல் ஆரோக்கியத்தைப் பலமாக வைத்துக்கொள்வோம்.