23 வயதிற்கு கீழ்ப்பட்ட ஆடவர் முன்னணி கழகங்களுக்கு இடையிலான முதல்தர கிரிக்கெட் தொடரினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஏற்பாடு செய்திருக்கின்றது.
அந்தவகையில் இலங்கையின் 18 முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்கெடுக்கும் குறித்த தொடர் இரண்டு நாட்கள் கொண்ட போட்டிகளாக இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
சுமார் 2 மாதங்கள் வரை இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கோடு நடைபெறும் இந்தத் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவிருப்பதோடு, தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 04 மற்றும் 05ஆம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது