இம்மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரிலிருந்து இலங்கை அணியின் நுவன் துஷார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் வெளியேறியுள்ளனர்.
CPL தொடரில் சென் கைட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிகளுக்காக இவர்கள் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், உபாதையால் இவர்கள் தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவன் துஷார பெருவிரல் உபாதையால் விலகினார். அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வனிந்து ஹஸரங்க தசைப்பிடிப்பு உபாதை காரணமாக வெளியேறினார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் CPL தொடரில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் சம்ஷி மற்றும் என்ரிக் நோக்கியா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.