இந்த சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு பாதையில் இருந்த வெள்ளியை எடுத்து சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த வெள்ளி எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்த காவல்துறையினர் அதன் உண்மைத் தன்மையினைக் கண்டறிந்துள்ளனர்.
வானத்திலிருந்து குறித்த வெள்ளி பொழியவில்லை எனவும் இது, காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என அந்தப்பகுதியில் தங்கியிருந்த கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட செயல் என்றும் தெரியவந்துள்ளது.
பாரியளவிலான வெள்ளியினைக் கொள்ளையடித்துள்ள கடத்தல்காரர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க இந்த வெள்ளிகளை ஊரின் ஒரு பகுதியில் மழை போன்று பொழிய வைத்துள்ளனர்.
இவ்வாறு இருந்த வெள்ளித் துகள்களின் எடை 10 முதல் 50 கிராம் வரை இருந்ததாகவும் இவற்றின் பெறுமதி 1000 இந்திய ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.