இந்தியாவின் ஆந்திராவில் மருமகன் ஒருவருக்கு மனைவியின் வீட்டில் கொடுக்கப்பட்ட விருந்துபசாரம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆடி மாதத்தையொட்டி தனது மனைவியைப் பிரிந்திருந்த கணவன் மீண்டும் தனது மனைவியை அழைத்துச் செல்ல மனைவியின் வீட்டிற்குச் சென்ற போது இந்த விருந்து வழங்கப்பட்டுள்ளது.
100 வகையான உணவுகள் இவருக்கு பரிமாறப்பட்டுள்ளதுடன் இதனை சற்றும் எதிர்பாராத கணவன் மகிழ்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இவருக்கு வழங்கப்பட்ட இந்த விருந்தில் அறுசுவை உணவுகளும் பரிமாறப்பட்டுள்ளன.