வசூல் வேட்டைக்குத் தயாராகும் தளபதி விஜய்யின் GOAT...
தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் நாயகனாகத் திகழ்பவர் தளபதி விஜய். உலகளவில் இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களின் வசூலானது மிகப்பெரிய அளவில் இருக்கும்.
இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.538 கோடி வரை வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதனிடையே தற்போது விஜய் நடித்துள்ள GOAT திரைப்படம் அடுத்த மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் 3ஆவது பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், விஜய்யும் படக்குழுவினரும் படத்தின் மீது முழு நம்பிக்கையில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து
இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளில் GOAT திரைப்படத்திற்கான PRE BOOKING ஆரம்பித்து
இதுவரையில் பல இலட்சங்களை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.