இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கருத்துகளைச் சுருக்கமாகக் கூறும் அம்சத்தை YouTube சோதித்தது. இதனால் பார்வையாளர்கள் என்ன விவாதிக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு கிரியேட்டர்ஸ் புதிய கன்டெண்ட்கான உத்வேகத்தைப் பெற முடியும்.
ஏனைய வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்ம் மற்றும் YouTube போன்ற சேவைகளுடன் ஒப்பிடுகையில், புதிய டூல் YouTubeற்கு ஒரு தொடக்கத்தை அளிக்கிறது. ஏனெனில் வேறு எந்த வீடியோ ஷேரிங் பிளாட்ஃபார்மும் தற்போது இந்த மேம்பட்ட அம்சங்களை வழங்குவதில்லை.
வீடியோக்களுக்கான உதவியைப் பெற, தற்போதுள்ள இன்ஸ்பிரேஷன் டூல் உடன் கூடுதலாக புதிய பிரேயின்ஸ்டார்ம் வித் ஜெமினியைப் பயன்படுத்துவதற்கான ஒப்ஷனை கிரியேட்டர்ஸ் இப்போது பெற்றுள்ளனர்.
கிரியேட்டர்கள் ஏற்கனவே உள்ள டூல்-ஐ விரும்புகிறார்களா அல்லது வீடியோ ஐடியாஸ் பெற புதிய ஜெமினி பவர்ட் ஃபங்ஷனாலிட்டி பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்ப்பதாகவும் YouTube கூறுகிறது.
புதிய டூலை முயற்சிக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், கிரியேட்டர் ஸ்டுடியோவைத் திறந்து, Search
பாரில் Video Idea என டைப் செய்யவும். அங்கே, நீங்கள் இன்ஸ்பிரேஷன் டூல் அல்லது பிரேயின்ஸ்டார்ம் வித் ஜெமினியைத் தேர்வு செய்யலாம்.