பழங்கள் ஒவ்வொன்றிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதிலும் பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன.
பேரிச்சம்பழமானது துரிதமான ஆற்றலையும், உடலுக்கு பல
சத்துக்களையும் அளிப்பதாக உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும், கொலஸ்ட்றோலைக் கரைப்பதற்கும் இது உறுதுணையாக அமைகிறது.
பேரிச்சம்பழத்தை நெய்யுடன் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம்.
பேரிச்சம்பழத்தில் இயற்கையான இனிப்புச்சத்து உள்ளது. நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் அதில் சேரும்போது, அது உடலுக்கு நிலையான நீடித்த ஆற்றலைக் கொடுக்கும்.
குடலின் செரிமானத்திற்குத் தேவையான நொதியங்களை உற்பத்தி செய்யும் திறன் நெய்யிற்கு அதிகம் உள்ளது. ஆகவே, நெய் சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானம் எளிமையாக நடைபெறும். அத்துடன் மலச்சிக்கலுக்குத் தீர்வும் கிடைக்கும்.
பெண்கள் கர்ப்பக் காலத்திலும், பிரசவத்திற்குப் பின்பும் இந்தப் பழத்தை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடையும்.
இவ்வாறு நெய்யுடன் பேரிச்சம் பழத்தைச் சேர்த்துச் சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.