வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய், TOP STAR பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் GOAT.
இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். GOAT திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகின்றன.
இந்நிலையில் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுபெற்று தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சமீபகாலமாக GOAT திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதன்படி GOAT திரைப்படத்தின் TRAILER குறித்த UPDATE இன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.