பெண் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் பின்பக்க Cover இல் எறும்புகளை உயிருடன் வைத்திருக்கும் காணொளி வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களின் எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தங்களது கையடக்கத் தொலைபேசிகள் தனித்துவமாகவும், நாகரீகமாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பலர் வித்தியாசமான Mobile Coverகளை பயன்படுத்துகின்றனர்.
இந்தநிலையில் தற்போது வைரலாகி வரும் காணொளியில் பெண் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியின் பின்புறம் இருந்த Mobile Cover இல் எறும்புகளை உயிருடன் வைத்திருக்கும் அதேவேளை அந்த எறும்புகள் Mobile Cover உள்ளே இருந்து வெளியே வருவதற்கு முயற்சிப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
இதற்கு தற்போது பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன் இவ்வாறான Mobile Cover களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.