இந்தத் திரைப்படத்தின் கதையைத் தாண்டி பரத்வாஜ் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டான பாடல்கள் என்பதுடன், இந்தத் திரைப்படத்தின் பாடல்களை அடித்துக்கொள்ள எந்தப் பாடலும் இல்லை என்றே கூறலாம்.
அதிலும் இப்படம் மூலம் தான் தமிழ் சினிமா இரசிகர்கள் கொண்டாடும் அஜித் மற்றும் ஷாலினி நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.
நடிகர் அஜித்தின் திரைப்படங்களில் அதிக நாட்கள் திரையரங்குகளில் வெளியான திரைப்படமாகவும், வசூலை அள்ளிக் குவித்த திரைப்படமாகவும் அமர்க்களம் திரைப்படம் அமைந்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வெளியாகியிருந்தது.
அந்தவகையில் இந்தத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், #25YearsOfAmarkalam என்ற Hashtag இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.