பொதுவாக பலரும் பொலிவான சருமத்தைப் பெறுவதற்காக இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பல அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் அவை பலருக்கும் தீமையான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே இயற்கையான முறையில் பல நூற்றாண்டுகளாக கொரிய தோல் பராமரிப்பு விடயத்தில் முக்கிய பங்காற்றும் அரிசி நீரைப் பயன்படுத்தி எவ்வாறு சருமத்தைப் பராமரிக்கலாம் என்று இந்தப் பதிவில் காணலாம்.
அரிசியை ஊறவைத்த நீரில் இயற்கையாகவே சருமப் பொலிவிற்குத் தேவையான Vitamins, தாதுக்கள் போன்றவை நிரம்பியுள்ளன. ஆகவே அரிசியை ஊறவைத்த நீர், சருமத்தைப் பிரகாசமாக்கி அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும்
அளிக்கின்றது.
அரிசியை ஊறவைத்த நீரில் சருமத்தைப் பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. எனவே முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மற்றும் எரிச்சல் உணர்வைக் குறைக்க அரிசியை ஊற வைத்த நீர் பயனுள்ளதாக இருக்கும்.
முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள்
இந்த நீரில் முகத்தைக் கழுவுவது
சிறந்ததாகும்.
சூரிய ஒளியினால் சிலரின் சருமத்தில் வறட்சி ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட சருமம் பொலிவுற வேண்டும் என நினைப்பவர்கள் அரிசியை ஊற வைத்த நீரைப் பயன்படுத்தி முகம் மற்றும் கைகளைக் கழுவலாம்.
அரிசியை ஊறவைத்த நீரில் Ferulic Acid உள்ளது. இது சூரிய ஒளியினால் ஏற்படும் சருமப் பாதிப்பிலிருந்து எம்மைப் பாதுகாக்கின்றது.
எனவே அரிசியை ஊறவைத்த நீர் மூலம் ஆரோக்கியமான, பொலிவான சருமத்தைப் பெற்றிடுங்கள்.