சீனாவின் நான்ஜிங் பகுதியில் உள்ள பிரபலமான Shopping Mall ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கழிவறைகளின் காரணமாக வைரலாகி வருகின்றது.
இதேவேளை அங்குள்ள கழிவறைகளைப் பயன்படுத்துவதற்காக மக்கள் அந்த Shopping Mall க்கு அதிகளவில் விஜயம் மேற்கொள்வதாகவும் செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதிநவீன மற்றும் உயர்ந்த வசதிகளுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்தக் கழிவறைகள் அங்கு வசிக்கும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமடைந்துள்ளது.
மக்கள் தினமும் வரிசையில் நின்று இதனைப் பயன்படுத்துகின்றனர். மொத்தம் ஆறு நிலைகளில் உள்ள இந்தக் கழிவறைகள் பல்வேறு வகையான Themes , Design மற்றும் பல அதிசொகுசு வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் Wireless Charging , திறந்தவெளி சோஃபாக்கள், சூடான இருக்கைகள், வெவ்வேறு வயதினருக்காக வடிவமைக்கப்பட்ட Sink , தானியங்கிக் கழிப்பறைகள் ஆகியவற்றை இங்கு வரும் மக்கள் அனுபவிக்க முடியும் என்றும் இதன் காரணமாகவே அதிகளவானவர்கள் இங்கே வருகைத் தருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த உயர்தர பொதுக் கழிவறைகள் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருவதால் பிரபலமான Youtubers மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த Shopping Mall க்கு படையெடுத்து வருகின்றனர்.