அயர்லாந்தின் டப்ளினில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த அயர்லாந்து மகளிர் அணி, கெபி லூயிஸ் பெற்றுக்கொடுத்த சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைக் குவித்தது.
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சர்வதேச T20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
துடுப்பாட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியின் கெபி லூயிஸ் 75 பந்துகளை எதிர்கொண்டு 119 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் அச்சினி குலசூரிய, ஷஷினி கிம்ஹானி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
174 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 65 ஓட்டங்களையும் கவிஷா டில்ஹாரி ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் ப்ரெண்டர்காஸ் மற்றும் சாஜன்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகியாகவும் தொடரின் நாயகியாகவும் அயர்லாந்தின் கெபி லூயிஸ் தெரிவானார்.