வெள்ளைப்பூசணியில் அதிக நீர்ச்சத்து காணப்படுகின்றது. எனவே அதிக வெப்ப காலங்களில் இதனை உட்கொள்வதனால் உடல் உஷ்ணம் தணிக்கப்படும்.
வெள்ளைப் பூசணியில் கொழுப்புச் சத்துக்கள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. எனவே உடலிலுள்ள கொழுப்பை இது சீராக வைத்திருக்கும்.
அத்துடன் வெள்ளைப்பூசணியின் சாற்றைப் பிழிந்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை சீராகக் காணப்படும்.
வெள்ளைப்பூசணியின் சாற்றுடன் சிறிதளவு தேனையும் கலந்து குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். அத்துடன் எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கப்படும்.
எனவே ஆரோக்கியம் தரும் இந்த வெள்ளைப்பூசணியை உட்கொண்டு, உடல் நலத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.