இந்தத் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில்,இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற இராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில்,"அமரன்" திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,இந்தியாவின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக ‘அமரன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
இந்தப் போஸ்டர் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.