Top Star பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள 'அந்தகன்' திரைப்படம் கடந்த 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரசாந்த் நடிப்பில் 5 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்துள்ள இத்திரைப்படம் 'அந்தாதூன்' என்ற ஹிந்தித் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ளது.
இதேவேளை இத்திரைப்படம் வெளிவந்து தற்போது 6 நாட்களைக் கடந்துள்ள நிலையில், உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 5.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்தின் வெற்றியை இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.