இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்றையதினம் வெளியானது 'தங்கலான்' திரைப்படம். இத்திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கி.பி. 1850 காலகட்டங்களில் கோலார் தங்கவயலில் இருந்து தங்கம் எடுக்க ஆங்கிலேயர்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை பயன்படுத்தினர் என்பதும், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அதிலிருந்து எவ்வாறு அவர்கள் மீண்டு தங்கத்தை எடுக்கின்றனர் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக்களம். இதேவேளை இரசிகர்கள் மத்தியிலும் இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படம் வெளியான முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அந்தவகையில் தங்கலான்
திரைப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.