இன்டெர்நெட் இல்லாமல் இன்று உலகத்தில் எதுவும் இயங்காது என்று சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் எந்தெந்த நாடுகள் அதிவேக இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளன என்ற பட்டியலை ஒக்லா எனும் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவையைக் கொண்ட முதல் 10 நாடுகள் எவை என்று தெரிந்துகொள்வோம்.
1. குறித்த பட்டியலில் கட்டார் முதல் இடத்தில் உள்ளது. கட்டார் உலகிலேயே 334.63 எனும் அதிவேக Mbps இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளது.
2.உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 323.61 Mbps இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளது.
3. உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் கொண்ட பட்டியலில் குவைத் மூன்றாம் இடத்தில் உள்ளது. இது 226.56 Mbps இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளது.
4. உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவையைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் நோர்வே நான்காம் இடத்தில் உள்ளது. இது 145.19 Mbps இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளது.
5. உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் கொண்ட பட்டியலில் டென்மார்க் ஐந்தாம் இடத்தில் உள்ளது. இது 144.93 Mbps இன்டர்நெட் சேவையைக் கொண்டுள்ளது.
6. உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் தென்கொரியா ஆறாவது இடத்தில் உள்ளது. இது 139.04 Mbps இன்டர்நெட் வேகத்தைக் கொண்டுள்ளது.
7. இந்தப் பட்டியலில் சீனா ஏழாவது இடத்தில் உள்ளது. இதன் வேகம்135.71 Mbps ஆக காணப்படுகின்றது.
8.சவுதி அரேபியா எட்டாவது இடத்தில் உள்ளது. இது 128.03 Mbps இன்டர்நெட் வேகத்தைக் கொண்டுள்ளது.
9. உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன் வேகம் 120.96 Mbps ஆக உள்ளது.
10. உலகிலேயே அதிவேக மொபைல் இன்டர்நெட் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன் கடைசி இடத்தில் உள்ளது. இது 113.87 Mbps இன்டர்நெட் வேகத்தைக் கொண்டுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் முதல் 10 இடங்களுக்குள்
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.