இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் "தங்கலான்." இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் கடந்த 15ஆம் திகதி வெளிவந்து மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் 'தங்கலான்' திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலேயே இந்திய மதிப்பில் 26.44 கோடி ரூபாவை வசூலித்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததால் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் தகவலை நடிகர் சீயான் விக்ரம் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
விரைவில் 'தங்கலான் -2' திரைப்படத்திற்கான படப்பிடிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து நடிகர் சீயான் விக்ரமின் இரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.