புதினா இலைகள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, நம்முடைய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே புதினா இலைகளின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
புதினாவில் இருக்கும் மெந்தோல் எனும் பொருள் மூக்கடைப்பைப் போக்க உதவுகிறது. நாட்பட்ட இருமல்,சளி,தொண்டைப் புண் என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புதினா இலைகளை உட்கொள்வது சிறந்ததாகும்.
தேநீரில் புதினா இலைகளையும் சேர்த்து அருந்துவதால் மன அழுத்தம்,வயிற்று வலி, உடற்சோர்வு போன்றவை நீங்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுமார் 7முதல் 10 புதினா இலைகளை ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி, காலையில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எனவே புதினா இலைகளைப் பயன்படுத்தி எமது உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்திக் கொள்வோம்.