Gossip Sooriyan Fm - என்னால் தான் விளையாடுகிறார்கள் - ஜெய் ஷா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
490 Views
தான் கடுமையாக நடந்து கொண்டதால் தான் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (BCCI) செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்தனர். அதன் காரணமாக அவர்களது BCCI ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். ஆனால், இஷான் கிஷன் அப்போதும் கூட உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் விளையாடியதால் அண்மையில் இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றார். ஆனால், இஷான் கிஷனுக்கு இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே இந்திய அணியில் அவரை தேர்வு செய்வோம் என தேர்வுக் குழுவினர் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில் இஷான் கிஷன் தற்போது ஜார்கண்ட் மாநில அணிக்காக உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.