தளபதி விஜய்யின் GOAT திரைப்பட TRAILER நேற்று மாலை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் ஏற்கனவே அரசியல் களத்தில் இறங்கிய நிலையில் GOAT படத்திலும் நிச்சயம் அரசியல் சார்ந்த விடயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று "உங்களை LEAD பண்ணப்போறது ஒரு புது LEADER" என விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பிடும் வகையில் TRAILER இல் ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது.
அரசியல் மட்டுமன்றி 'மருதமலை மாமணியே முருகையா' என ஆன்மீகம் சார்ந்து கில்லி படப் பாணியில் விஜய் பாடுவதும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதற்காக விஜய்யை CG மூலமாக இளம் வயது தோற்றத்துக்கு மாற்றியும் இருக்கிறார்கள்.
விஜய்க்கு இணையாக TOP STAR பிரசாந்தும் தனது நடிப்பால் இரசிகர்களை மிரட்டியுள்ளார். அத்துடன் பிரபு தேவா மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அவரது காட்சிகளும் அமைந்துள்ளன.
பின்னணியில் MSD FOREVER என்ற போஸ்டர் மற்றும் CSK இரசிகர்கள் உட்பட பிரேம்ஜியையும் GOAT TRAILER இல் காட்டி இருக்கிறார் வெங்கட் பிரபு.
வயதான பிறகும் MISSION இல் பங்கேற்று வில்லன் மோகனின் திட்டத்தை முறியடிக்க முடியுமா? என்ற கதைக்களத்துக்கு அமைவாக விஜய் வயதான தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.
இதனிடையே விஜய் மீது அவரது மனைவி சினேகா கொண்டுள்ள காதல்,சந்தேகம்,கவலை அனைத்தையும் GOAT TRAILER இல் சிறப்பாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.
எனவே GOAT TRAILER இரசிகர்களுக்குக் கொடுத்த உற்சாகக் களிப்பு உறுதியாக திரைப்படத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கை இரட்டிப்பாகியுள்ளது.