தமிழ்த்திரையுலகில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது 170 ஆவது திரைப்படமான 'வேட்டையன்' திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார்.'ஜெய்பீம்' திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் ரஜினியுடன், அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுபெற்று பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், வேட்டையன் திரைப்படம் October மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.