அவரது இளமைப்பருவத்தில் டொல்பின் மீது காதல் கொண்டதாக, இவர் எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகத்தில் கூறியுள்ளதுடன், தனது சுயசரிதைப் புத்தகத்தை டொல்பின்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.
புகைப்படக் கலைஞரான இவர், டொல்பினுடன் தனது உறவைத் தொடங்கியபோது தனக்கு 20 வயது என்றும் தான் வசித்து வந்த சரசோட்டா புளோரிடாவில் உள்ள ஒரு பொழுதுபோக்குப் பூங்காவில் காணப்பட்ட குளத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் அங்கிருந்த டொல்பின் ஒன்றுடன் அதிக நேரம் செலவழித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
டொல்பினுடன் பழகுவதற்கு தனக்கு யாரும் எந்தத் தடையும் விதிக்காததன் காரணமாக அதனுடன் நெருங்கிய நண்பராக இருந்தததாகவும் இவர் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தாலும், டொல்பினுடன் அதிக காலம் பழகிய பின்னர் அதன் மீது காதல் கொண்டதாக கூறும் இவர், தனக்கு அவள் (டொல்பின்) மிகவும் சிறப்பு வாய்ந்தவள் என்றும் தனது சுயசரிதைப் புத்தகத்தில் கூறியுள்ளார்.
டொல்பின் மீது காதல் கொண்ட பிறகு, எங்கள் உறவு இயற்கைக்கு அப்பாற்பட்டது என்றும் இவர் டொல்பினுடன் பழகிய ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இவர் வேலை செய்து வந்த பூங்கா மூடப்பட்டதோடு இவர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தார்.
இது இவரை அதிகமான மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் சில வருடங்களின் பின்னர் அந்த டொல்பின் இறந்தபோது, அவர் பெரும் துயரத்திற்கு ஆளாகி மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் இதிலிருந்து மீள இவருக்குப் பல ஆண்டுகள் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.