கணுக்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சத்திர சிகிச்சைக்குப் பின்னர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மட் ஷமி ரஞ்சிக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அவர் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் இணைவார் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறும் ரஞ்சிக் கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.