தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநர்களில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து மாபெரும் வசூல் சாதனை படைத்திருந்தது.
இதன் மூலமாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இதனிடையே Bollywood நடிகர் அமீர் கானை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'Pan India' படமாக இந்தப் படத்தை எடுக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை அறிந்த இரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.