பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானதொன்றாகும். அதேபோல், உடலிற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளைக் கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் தாயாகி, ஒரு குழந்தையை பிரசவிக்க சராசரியாக ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை விட 350-500 கலோரிகள் அதிகமாகவே தேவைப்படும். மேலும், ஒரே நேரத்தில் அதிகம் உண்பதைத் தவிர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சில மணி நேர இடைவெளியில் உண்பது சிறந்தது.
பச்சை இலைக் காய்கறிகளில் விட்டமின் A,C,E,கல்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் இருப்பதால் இவற்றை உட்கொள்ளும் போது வயிற்றிலிருக்கும் குழந்தை எந்தக் குறைபாடுமில்லாமல் பிறக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிப்பதால், அவர்கள் சக்கரை வள்ளிக்கிழங்கைச் சாப்பிட்டால் இரத்தத்திலுள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருப்பதால், அவர்கள் வெள்ளரிக்காயை உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தானியங்களை உணவாக எடுத்துகொள்வது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, பொதுவாக இனிப்புச் சேர்க்கப்பட்ட உணவையோ, அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதால், கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாகவும், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாகவும் பிறக்கும்.