இதுபோன்ற காணொளிகளினால் வனவிலங்குகளின் வாழ்விடங்களில் அவை எவ்வாறான சவால்களை எதிர்கொள்கின்றன என்பதை நாம் அறிந்துகொள்ளவும் முடிகின்றது.
இந்த நிலையில், எருமைகள் கூட்டம் ஒன்றுக்கு மத்தியில் சிக்கிக் கொண்ட சிங்கக்குட்டி ஒன்று, அவற்றிடம் இருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறி நின்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தன்னைத் துரத்தி வந்த எருமைக் கூட்டத்திடம் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக அங்கிருந்த காய்ந்த மரம் ஒன்றின் மீது அந்த சிங்கக்குட்டி ஏறியுள்ளது.
இவ்வாறு மரத்தின் மீது ஏறி நின்ற சிங்கக்குட்டியைத் தாக்குவதற்காக அங்கிருந்த எருமைக்கூட்டம் அந்த மரத்தைச் சுற்றி நின்றன.
இந்நிலையில், மரத்தின் கிளை முறிந்து சிங்கக்குட்டி மரத்திலிருந்து கீழே வீழ்ந்த சந்தர்ப்பத்தில், எருமைக்கூட்டம் சிங்கக்குட்டியைத் தாக்க தயாரானவேளை, அங்கிருந்த பிரதேசவாசிகள் சிலர் சத்தம் எழுப்பி அந்த எருமைக்கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடித்து சிங்கக்குட்டியைக் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த இந்தச் சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில் அந்தக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.